logo

தேனி மாவட்டம் சின்னமனூர் கிழக்கு ரத வீதி - கச்சேரி காமு சந்து, சுராஜ் மூலம் கிளினிக் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து விழும் தண்ணீரால் நிகழ இருக்கும் பேராபத்து!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் கிழக்கு ரத வீதி - கச்சேரி காமு சந்து, சுராஜ் மூலம் கிளினிக் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து விழும் தண்ணீர் TV அருகில் உள்ள மின்சார கம்பம் வயர் மெயின் சுவிட்ச் மீட்டர் பெட்டி இவைகளில் விழுந்து தெருவில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் தண்ணீரில் மின்சாரம் கலந்து பாதையில் நடக்கும் பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, ஆகவே 19/04/ 2024 இன்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இது சம்பந்தமாக மின்சாரத்துறை வாரியத்திற்கும், காவல் நிலையத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின் கம்பி கசிவு மூலமாக பேராபத்து ஏற்படும் முன்பாக, இந்த ஆபத்திலிருந்து பொதுமக்களைக் காக்க சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகளும், தேனி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்...... இந்த புகார் மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்.....?.............................. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

131
5992 views